Tuesday, 15 May 2012

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு....!

in the name of allah...
பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்.....!

'பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள். திண்ணமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்'
(அல் குர்ஆன் 2:153)

மேலும் கூறுகிறான்: 'சிறிதளவு அச்சத்தாலும் பசியாலும் உடைமைகள், உயிர்கள், விளைபொருள்களில் இழப்பை ஏற்படுத்தியும் திண்ணமாக உங்களை நாம் சோதிப்போம். (இந்தச் சூழ்நிலைகளில்) பொறுமையை மேற்கொள்வோருக்கு (நபியே!) நீர் நற்செய்தி சொல்வீராக! '
(அல் குர்ஆன் 2:155)

அல்லாஹ் கூறுகிறான்: 'இறைநம்பிக்கை கொண்டவர்களே! பொறுமையை மேற்கொள்ளுங்கள். (எதிரிகளை விஞ்சும் வகையில்) பொறுமையில் நிலைத்திருங்கள். (சத்தியத்திற்காகத் தொண்டு செய்திட) எப்பொழுதும் ஒருங்கிணைந்து முனைப்புடன் இருங்கள்'' (அல் குர்ஆன் 3:200)

மேலும் கூறுகிறான்: 'பொறுமையாளர்களுக்கு அவர்களின் கூலி கணக்கின்றி நிறைவாய் வழங்கப்படும்' (அல் குர்ஆன் 39:10)

வேறோர் இடத்தில், 'யார் பொறுமையை மேற்கொள்கிறார்களோ மேலும் மன்னிக்கவும் செய்கிறார்களோ அவர்களின் அந்தச் செயல் திண்ணமாக உறுதி மிக்க (வீரச்) செயல்களைச் சேர்ந்ததாகும்' (அல் குர்ஆன் 42:43)

மற்றோரிடத்தில், 'மேலும் நாம் உங்களை நிச்சயம் சோதனைக்கு உள்ளாக்குவோம். உங்களில் யார் யார் முஜாஹிதுகள் (போராளிகள்) பொறுமையாளர்கள் என்பதை நாம் கண்டறிவதற்காக!' (அல் குர்ஆன் 47:31)

in the name of allah..

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. 1:5-7